பாலியல் தொல்லை புகார்: மலையாள இயக்குநர் விமான நிலையத்தில் தடுத்து வைப்பு

மலையாள இயக்குநர் சணல் குமார் சசிதரன் மீது பிரபல நடிகை ஒருவர், 2022-ம் ஆண்டு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகார் பதிவு செய்தார். இதற்காக கைது செய்யப்பட்ட சணல் குமார் சசிதரன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், அந்த நடிகை 2024-ம் ஆண்டில், சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு களங்கம் விளைக்கும் மற்றும் மிரட்டும் வகையிலான பதிவுகளை வெளியிட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி மீண்டும் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் கொச்சி போலீஸ் அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டனர். இதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் அவர் வந்தபோது சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தடுத்து வைத்தனர்.

இது குறித்து சணல் குமார் சசிதரன் கூறியதாவது:

“கொச்சி போலீஸாரால் வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீஸின்படி நான் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். எனது மீதான வழக்கு என்னவென்று இன்னும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box