“சமூக வலைதளங்களில் மனநோயாளிகள் அதிகம்” – தங்கர் பச்சன் கடும் விமர்சனம்

‘படையாண்ட மாவீரா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் தங்கர் பச்சன் பேசியதாவது:

“இந்த நாட்டில் அதிகம் ஒடுக்கப்படுபவர்கள் தமிழரும், அழிக்கப்படுவது தமிழ் மொழியும் தான். தமிழ் மொழியை காக்க பலர் போராடியிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை இலக்கியங்களிலும், திரைப்படங்களிலும் வெளிப்படுகிறது.

சமூக வலைதளங்களில் கமென்டுகள், ஃபாலோயர்கள் என்ற பெயரில் எண்ணற்ற மனநோயாளிகள் சுற்றி வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் அடிமைகளாக, கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள். சமூக வலைதளம் நல்லதைக் கொண்டுவரும் கருவி இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மாவீரன் குருவை நாங்கள் அரசியல்வாதியாக அல்ல, தமிழனாகவே பார்த்தோம். மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Facebook Comments Box