சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் ‘நூறுசாமி’
‘பிச்சைக்காரன்’ பட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இணைகிறார்கள். இவர்கள் சேர்ந்து பணிபுரிய உள்ள புதிய படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்தப் படம் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகியுள்ளது. இதையடுத்து, விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுள்ளது.
விஜய் ஆண்டனி வெளியிட்ட தகவலின்படி, ‘நூறுசாமி’ அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால் இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன், லிஜோ மோல் ஜோஸ் மற்றும் ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இதற்கு முன்னர், ஜோஸ்வா சேதுராமன் இயக்கும் ‘லாயர்’, மற்றும் ‘எமகாதகி’ இயக்குநர் பெப்பின் இயக்கவுள்ள படத்தை முடிக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டுள்ளார்.