தா.செ.ஞானவேல் இயக்கத்தில் மோகன்லால்?
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.
‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய் பீம்’, ‘வேட்டையன்’ போன்ற படங்களை இயக்கிய தா.செ.ஞானவேல், அடுத்த படத்தைப் பற்றிய பல தகவல்கள் வெளியானன. இதற்கிடையில், அவரது இயக்கத்தில் சரவணபவன் முதலாளியின் கதையை உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு ‘தோசா கிங்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
பல முன்னணி நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தாலும் எதுவும் முடிவடைந்ததாக இல்லை. இறுதியாக, மோகன்லாலை சந்தித்து கதையை அவருக்கு சொல்லியுள்ளார் தா.செ.ஞானவேல். மோகன்லாலும் சம்மதம் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. அவரது தேதிகள் மற்றும் ஒப்பந்த விவரங்கள் முடிவடைந்த பிறகு கையெழுத்து நடைபெறும் எனத் தெரிகிறது.
‘தோசா கிங்’ படத்தை முடித்த பின்பு, தா.செ.ஞானவேல் மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதற்கான கதை மற்றும் திரைக்கதையை தற்போது தீவிரமாக உருவாக்கி வருகிறார். மோகன்லால் படம் முடிந்த பின்பு தான், சூர்யா படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.