தர்ஷனின் ‘காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு தொடக்கம்

தர்ஷன், கெளதம் மேனன் நடிக்கும் ‘காட்ஸ்ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் பிஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை மோகன் குரு செல்வா இயக்குகிறார். இது முழுக்க காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகிறது.

படத்தில் தர்ஷன் மற்றும் கெளதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புராணக் கற்பனை, நகைச்சுவை, காதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதை கொண்ட இப்படம், காதலில் தோல்வியுற்ற இளைஞனின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்ந்து, சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் என்பதே மையக்கரு என படக்குழு தெரிவித்துள்ளது.

பூஜை நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் விஜய், சசி, பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அலிஷா மிரானி, ரோபோ சங்கர், கே.வி.ஒய். வினோத், பிளாக் பாண்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படக்குழுவில்:

  • ஒளிப்பதிவு – சிவராஜ்
  • எடிட்டிங் – அரவிந்த் பி. ஆனந்த்
  • இசை – கார்த்திக் ஹர்ஷா
Facebook Comments Box