வித்யசாகரின் மகன் ஹர்ஷவர்தன் – ஹீரோவாக அறிமுகம்

இசைஞானி வித்யசாகரின் மகன் ஹர்ஷவர்தன் விரைவில் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

சமீபத்தில், லிங்குசாமி இயக்கத்தில் ஹர்ஷவர்தன் ஹீரோவாக வருகிறார் என்ற செய்தி பரவியது. ஆனால் உண்மையில் அவர் முதலில் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில், புதிய இயக்குநர் இயக்கும் கதையில் நாயகனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிமுகப்படம் முடிந்த பின், லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது ஹர்ஷவர்தன் அறிமுகப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாரிப்பு நிறுவனம் பணியாற்றி வருகிறது. இந்த மாதத்துக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் வித்யசாகர். அவரது இசையில் வெளிவந்த பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. வித்யசாகரின் மகன் ஹர்ஷவர்தன் இணைய உலகில் ஏற்கனவே நல்ல பிரபலமாக உள்ளார். அப்பாவுடன் இணைந்து பல கச்சேரிகளில் பாடியுள்ளதுடன், விஜய் ரசிகராகவும் அறியப்படுகிறார். விஜய் பாடல்களை பாடிக்கொண்டே நடனமாடும் அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Facebook Comments Box