ரூ.100 கோடியை தாண்டிய ‘மிராய்’!

தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடித்த பான் இந்தியா படம் ‘மிராய்’. பேன்டஸி கதைக்களத்தில் உருவான இப்படத்தில் மனோஜ் மன்சு வில்லனாக நடித்துள்ளார். ரித்திகா நாயக், ஜெகபதி பாபு, ஸ்ரேயா, ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி இயக்கியுள்ளார். செப்டம்பர் 12 அன்று வெளியான இப்படம், ஆன்மிக அம்சங்களுடன் கலந்துகொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேஜா சஜ்ஜா முன்னதாக நடித்த ‘ஹனுமான்’ திரைப்படம் ரூ.300 கோடி வசூல் சாதனையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box