‘இட்லி கடை’ ட்ரெய்லர் – பாரம்பரிய உணவு vs ஃபாஸ்ட் ஃபுட் மோதல்!
தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் அக்டோபர் 1-ம் தேதி படம் வெளியாக உள்ளது.
ட்ரெய்லர் பார்வை:
கதையின் மையக் கரு பாரம்பரிய உணவும் ஃபாஸ்ட் ஃபுட்-உம் இடையிலான போட்டி என்பதை ட்ரெய்லர் தெளிவாக வெளிப்படுத்துகிறது. கிராமத்தில் இட்லி கடை நடத்தும் ராஜ்கிரணின் மகனாக தனுஷ் நடிக்கிறார். அவர் நகரத்துக்குச் சென்று ஒரு பெரிய ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்ட் சங்கத்தில் வேலை செய்கிறார். பின்னர் தனது கிராமத்திற்குத் திரும்பி அப்பாவின் இட்லி கடையை மீண்டும் நடத்துகிறார்.
ட்ரெய்லரில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன், பார்த்திபன், சமுத்திரக்கனி ஆகியோரின் காட்சிகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை உணர்ச்சி தருகிறது.
காட்சிகளில் சென்டிமெண்ட் இயல்பாக வெளிப்பட்டால், வலிந்து திணிக்காமல் உணர்வுபூர்வமாக சென்றால், ‘இட்லி கடை’ படம் வெற்றியடைய வாய்ப்பு அதிகம் என சொல்லலாம்.