‘லோகா’ தொடர் வசூல் வேட்டை: ஓடிடி வெளியீடு தாமதம்

‘லோகா’ படம் தொடர்ந்தும் நல்ல வசூல் செய்து வருவதால், இதன் ஓடிடி வெளியீடு தாமதமாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லோகா: சாப்டர் 1’. இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று நன்றி தெரிவித்தனர். தற்போது வரை இப்படம் பின் வெளியான படங்களை விட சிறந்த வசூலை பெற்றுள்ளது.

இந்த தொடர் வரவேற்பினால், படத்தின் ஓடிடி வெளியீடு இப்போது நடைபெறவில்லை என்று தயாரிப்பாளர் துல்கர் சல்மான் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

“இப்போதைக்கு ‘லோகா’ ஓடிடி தளத்தில் வெளியீடு இல்லை. அதற்கான வதந்திகளை புறக்கணியுங்கள். அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருங்கள்.”

மலையாளத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘லோகா: சாப்டர் 1’ படைத்துள்ளது. ‘எம்புரான்’, ‘துடரும்’ போன்ற படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளது. இப்படத்தில் டോவினோ தாமஸ், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் கவுரவ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Facebook Comments Box