“3 நாட்களாக உலகமே தெரியவில்லை” – ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் உருக்கமான பதிவு

சில நாட்களுக்கு முன்பு நடிகரும், காமெடி நடிகராகவும் பிரபலமான ரோபோ சங்கர் காலமானார். அவரது மறைவு திரையுலகத்திலும், ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதி ஊர்வலத்தில் மனைவி நடனமாடி வழியனுப்பிய காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால், அதுவும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:

“அப்பா, நீ எங்களை விட்டுச் சென்று மூன்று நாட்கள் ஆகிறது. எங்களை சிரிக்க வைத்ததும் நீ, இப்போது அழ வைப்பதும் நீ தான். இந்த மூன்று நாட்களாக எனக்கு உலகமே தெரியவில்லை. நீ இல்லாமல் நம்ம குடும்பத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. ஆனாலும், நீ சொல்லிக்கொடுத்தது போல நான் கண்டிப்பாக வலிமையோடு நிற்பேன்.

தம்பி உன்னை தொடர்ந்து தேடி வருகிறான் அப்பா. நீ மேலே உன் நண்பர்கள், அண்ணன்களுடன் சந்தோஷமாக இருப்பாய் என நம்புகிறேன். விமர்சனங்களுக்கு அஞ்சாமல் இருக்க வேண்டும் என்று நீ கற்றுக் கொடுத்தது போல, உன்னுடைய மகள் என்ற பெயரை காப்பாற்றுவேன். உன்னைப் பெருமைப்பட வைப்பேன்.

லவ் யூ அண்ட் மிஸ் யூ அப்பா

எங்களுக்கு பிடித்த புகைப்படம் இது. எல்லோரும் இதைப் பார்த்தால், ‘உன் அப்பா மாதிரி ஜெராக்ஸ்’ என்று சொல்வார்கள். எப்போதும் உன்னைப்போலவே வாழ்வேன் அப்பா.”

இவ்வாறு தனது மனநிலையைப் பகிர்ந்து கொண்டு, அப்பாவை நினைத்து உருக்கமான பதிவை இந்திரஜா எழுதியுள்ளார்.

Facebook Comments Box