‘காந்தாரா சாப்டர் 1’ ட்ரெய்லர் – ஆன்மீகமும் பிரம்மாண்டமும் கலந்த அதிரடி!

‘காந்தாரா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் அடுத்த பாகம் ‘காந்தாரா சாப்டர் 1’ எனும் தலைப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி வெளியீடு செய்யப்பட உள்ள இப்படம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என ஏழு மொழிகளில் வெளியாகிறது.

ட்ரெய்லர் கதை

முதல் பாகத்தின் முடிவில் ரிஷப் ஷெட்டி மர்மமாக காணாமல் போன காட்சியிலிருந்து கதை தொடங்குகிறது. அந்த ரகசியத்தை அவரது மகன் அறிந்து கொள்ளும் முயற்சியே ட்ரெய்லரின் தொடக்கமாக உள்ளது.

பழைய கால வரலாறை வாய்வழிக் கதை சொல்லும் விதத்தில், கொடுங்கோல் ஆட்சியாளர், அவனை எதிர்த்து போராடும் நாயகன், அதனுடன் ஆன்மீகம், காதல், ஆக்‌ஷன் என அனைத்தையும் இணைத்து பான் இந்தியா அளவிலான கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை தீவிரமாகக் கவனம் ஈர்க்கிறது.
  • ‘காந்தாரா’ முதல் பாகத்தின் பலம் அதன் இயல்பும், பூர்வீக தன்மையும் தான்.
  • இரண்டாம் பாகத்தில் பிரம்மாண்டம் அதிகமாக இருந்தாலும், அதே நேட்டிவிட்டி மற்றும் இயல்பான கதையோட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments Box