‘ஸ்பைடர் மேன் 4’ படப்பிடிப்பில் டாம் ஹாலண்ட் காயம்

இதுவரை 8 ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில், டாம் ஹாலண்ட் நடித்து ‘ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங்’, ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்’, ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ ஆகிய 3 படங்கள் வெளியாகியுள்ளன.

இப்போது அவர் நடிப்பில் 4-வது படம் உருவாகிறது. ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடந்து வந்தது. ஆக்ஷன் காட்சிப் படப்பிடிப்பின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் டாம் ஹாலண்ட் காயமடைந்தார்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என்றும், இதனால் படப்பிடிப்பு ஷெட்யூல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box