ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு கவுரவம்!
பிரபல இசையமைப்பாளர் தேவா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் சிறப்பாக கவுரவிக்கப்பட்டார்.
இதுகுறித்து தேவா கூறியதாவது: “செப். 24-ம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் மிகுந்த மரியாதையுடன் என்னை வரவேற்றது. அங்கு தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு கிடைத்தது. பின்னர் மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. இந்த தருணம் எனக்கு மட்டும் அல்ல, உலகெங்கிலும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் உரியது.
இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன். இதற்காக லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box