பிரபாஸின் ‘த ராஜா சாப்’ ட்ரெய்லர் – காதல், நகைச்சுவை, திகில் கலந்த விருந்தா?
பிரபாஸ் நடித்துள்ள ‘த ராஜா சாப்’ திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். ரொமான்டிக் ஹாரர் காமெடி வகையில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளிவருகிறது. மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில், ஒளிப்பதிவை கார்த்திக் பழனி செய்திருக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
ட்ரெய்லர் எப்படி?
மூன்றரை நிமிடங்களை கடந்தாலும், கதையின் மையம் என்ன என்பதை வெளிப்படுத்தாமல் சஸ்பென்ஸுடன் ட்ரெய்லர் அமைந்துள்ளது. காமெடி திகில் வகை படங்கள் அதிகம் வராத காலகட்டத்தில், இப்படியான கதையைத் தேர்வு செய்திருப்பது பிரபாஸின் துணிச்சலை காட்டுகிறது.
‘பாகுபலி’க்குப் பின் பான் இந்தியா வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரபாஸுக்கு இந்த படம் அதனை ஈட்டித் தரும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. காதல், நகைச்சுவை, ஆக்ஷன், திகில் ஆகிய அனைத்தையும் குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய வகையில் கலந்து வழங்கும் முயற்சியாக படம் இருக்கிறது.
திரைக்கதை சரியாக அமையுமானால், இந்தப் படம் வெற்றியை உறுதி செய்வது உறுதி என ரசிகர்கள் நம்புகின்றனர். படம் வருகிற ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.