Patriot: மம்மூட்டி – மோகன்லால் இணையும் புதிய படம் டீசர் வெளியீடு!
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் புதிய படத்துக்கு ‘பேட்ரியாட்’ (Patriot) என்று பெயரிட்டு, அதன் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், மம்மூட்டி, மோகன்லால் மட்டுமின்றி ஃபகத் பாசில், குஞ்சாகோ போபன், நயன்தாரா, ரேவதி உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்துடன் படம் உருவாகி வருவதாக டீசர் வெளிப்படுத்துகிறது.
சில மாதங்களுக்கு முன்பு மம்மூட்டியின் உடல்நிலை சரியில்லாததால் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது அவர் குணமடைந்து திரும்பியதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
பேட்ரியாட் படத்தை ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி. அனில் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவை கவனிக்க, சுஷின் ஸ்யாம் இசையமைக்கிறார்.
இப்படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.