‘ட்யூட்’ திரைப்படம்: தமிழக விநியோக உரிமையில் மாற்றம்?

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் ‘ட்யூட்’ குறித்த தமிழக விநியோக உரிமையில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முந்தைய நிலையில், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை வைத்திருந்தது. ஆனால் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் ‘ட்யூட்’ உரிமைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் சில நாட்களில் நிறைவேறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக நிக்கித் பொம்மி, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றி வருகின்றனர்.

இதுவரை ‘ட்யூட்’ திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இன்று பிரதீப் ரங்கநாதன் பாடிய மூன்றாவது பாடலும் வெளியாகவுள்ளது. இதன் மூலம் பிரதீப் ரங்கநாதன் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

Facebook Comments Box