80, 90-களின் திரைப் பிரபலங்கள் பங்கேற்ற ரீயூனியன் விழா!

1980 மற்றும் 1990-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் திகழ்ந்த முன்னணி நடிகர்கள் வருடந்தோறும் ஒன்றுகூடி பழைய நினைவுகளைப் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டின் ரீயூனியன் விழா சென்னை ராஜ்குமார் சேதுபதி – ஸ்ரீபிரியா தம்பதியரின் இல்லத்தில் அக்டோபர் 4ஆம் தேதி மாலை நடைபெற்றது. கடந்த ஆண்டு கனமழையால் நிகழ்ச்சி நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு “80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்” சிறப்பாக நடந்தேறியது.

பெரும் நிகழ்ச்சிகளாக இல்லாமல், அன்பும் நட்பும் கலந்த ஒன்றுகூடலாக அமைந்த இந்த விழாவை லிஸ்ஸி லட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மொத்தம் 31 திரை பிரபலங்கள் இந்த இனிய சங்கமத்தில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். மாலையில் தொடங்கிய நிகழ்வு இரவு முழுவதும் நடைபெற்றது. பின்னர் அனைவரும் “அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம்” என்ற உறுதியோடு விடைபெற்றனர்.

இது குறித்து சுஹாசினி மணிரத்னம் மற்றும் லிஸ்ஸி லட்சுமி தெரிவித்ததாவது:

“இந்த நிகழ்வை ஒருங்கிணைத்ததில் மகிழ்ச்சி. எங்களுக்கிடையேயான நட்பு, அன்பு, மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்தது.”

இந்த ரீயூனியனில் பங்கேற்ற பிரபலங்கள்:

சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா, நதியா, ராதா, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், ஜெயசுதா, சுமலதா, ரஹ்மான், குஷ்பு, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், லிஸ்ஸி, சுரேஷ், ஷோபனா, மேனகா, ரேவதி, பிரபு, ஜெயராஜ், அஸ்வதி ஜெயராம், சரிதா, பானு சந்தர், மீனா, லதா, ஸ்வப்னா, ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

நட்பும் நினைவுகளும் கலந்த இந்த “80ஸ் ரீயூனியன்” நிகழ்ச்சி திரையுலகினருக்கு மறக்க முடியாத இனிய அனுபவமாக அமைந்தது.

Facebook Comments Box