‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்காக பட்ட கஷ்டங்கள்: சம்பத் ராம் விளக்கம்
‘காந்தாரா: சாப்டர் 1’ படத்திற்கு உலகமெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சம்பத் ராம், படத்தில் தெய்வீக சக்தியை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தின் தலைவராக நடித்தார். முழுக்க கருப்பு மேக்கப்பில் இருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை.
சம்பத் ராம் கூறியது:
“இந்தப் படத்தில் நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோஷம். மலைவாழ் மக்கள் தலைவனாக குறைந்த காட்சிகள் வந்தாலும், நிறைவான கதாபாத்திரமாக நடித்ததில் பெருமை அடைகிறேன்.
முகமும் உடலும் கருப்பு கலர் மேக்கப்பில் இருந்தது, குறிப்பாக முகத்தில் முதிர்ந்த தோற்றம் கொடுத்தேன். மேக்கப் செய்ய ஒன்றரை மணி நேரம், கழிப்பது ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டது. மொத்தம் இரண்டரை மணி நேரம் மேக்கப்புக்கு ஒதுக்கியோம். இது மிகவும் சிரமமான அனுபவமாக இருந்தது. இப்படம் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
பான் இந்தியா படத்தில் நடித்ததில் பெருமை அடைகிறேன். எனது திரையுலக பயணம் ‘சயனைடு’ (கன்னடம்) படத்திலிருந்து தொடங்கியது, அப்போது ரிஷப் ஷெட்டி கடைசி உதவி இயக்குநராக இருந்தார். பின்னர் ‘காந்தாரா’ படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் படத்தின் கெட்டப்புக்கு ஒற்றை நாளில் ஒன்றரை மணி நேரம் மேக்கப் செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு வருட காலத்திற்கும் மேல் பயணம் செய்து 26 நாட்கள் நடித்துள்ளேன்; ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் கலந்து கொண்டேன். படப்பிடிப்பில் தினமும் 500–2,000 பேர் பணியாற்றினர். பெரும் கூட்டத்தோடு, பெரும் பொருட்செலவில், பெரும் உழைப்புடன் இயக்குனர் மற்றும் அனைவரும் பணியாற்றிய படம் ‘காந்தாரா: சாப்டர் 1’.
படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருப்பதை நினைத்து, அதில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இருப்பது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. மீண்டும் ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,” என்று சம்பத் ராம் தெரிவித்தார்.