ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.370 கோடியைக் கடந்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம், 2022ஆம் ஆண்டு வெளியான மற்றும் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ படத்தின் முன்கதையாக உருவாகியுள்ளது. இதில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெளியான முதல் நாளில் இருந்து படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது, மேலும் நல்ல வசூலும் பெற்றுள்ளது.
வெளியான ஐந்து நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.370 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் ரூ.307 கோடி வசூலித்து, வெளிநாடுகளில் ரூ.63 கோடியை ஈட்டியுள்ளது. சில நாட்களில் இப்படத்தின் வசூல் ரூ.400 கோடியை கடக்கும் என சினிமா நிபுணர்கள் கணிக்கின்றனர்.
பிராந்திய மொழிகளில் வசூல் விவரம்:
- கன்னடம்: ரூ.76 கோடி
- தமிழ்: ரூ.24.75 கோடி
- தெலுங்கு: ரூ.52.65 கோடி
- மலையாளம்: ரூ.20.75 கோடி
- ஹிந்தி: ரூ.82 கோடி
அசல் மொழியான கன்னடத்தை விட, ஹிந்தி பேசும் மாநிலங்களில் இப்படம் அதிக வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.