‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் இசை நிறுவனம் தொடங்கினார் ஐசரி கே. கணேஷ்

‘பி.டி. சார்’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘சிங்கப்பூர் சலூன்’ உள்ளிட்ட படங்களை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்து வருபவர் ஐசரி கே. கணேஷ். தற்போது அவர் ‘மூக்குத்தி அம்மன் 2’, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘கட்டா குஸ்தி 2’, ‘டயங்கரம்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், தனது பிறந்த நாளை முன்னிட்டு ஐசரி கே. கணேஷ் ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ என்ற இசை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

அதன்பற்றி அவர் கூறியது:

“இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர் நாணி. உலக இசைத்துறையில் நிகழும் மாற்றங்களுடன் நாமும் முன்னேற வேண்டும். தமிழ்த் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் தளமாக இது இருக்கும். நாளைய இசையை உருவாக்கும் இயக்கம் இது. தொழில்நுட்பம், திறமை, கதை சொல்லல்—all ஒன்று சேரும் தென்னிந்தியாவின் படைப்பாற்றல் மையமாக ‘வேல்ஸ்’ உருவாகும். எனது பிறந்த நாளில் இந்நிறுவனத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என அவர் தெரிவித்தார்.

ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சித்து குமார், கோவிந்த் வசந்தா, ஷான் ரோல்டன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் இணைந்து, புதிய தலைமுறை தமிழ் இசை திறமைகளை இந்நிறுவனம் உருவாக்கும் திட்டத்தில் உள்ளது.

Facebook Comments Box