‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு படம் – ஜூனியர் என்.டி.ஆர் விலகியதாக தகவல்!
‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தில் இருந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் விலகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர்கள் எஸ்.எஸ். ராஜமவுலி மற்றும் ராஜ்குமார் ஹிரானி இருவரும் தனித்தனியாக ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட திரைப்படங்களை அறிவித்தனர். இதனால் பாலிவுட்டிலும் தெலுங்கு திரையுலகிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக, ராஜ்குமார் ஹிரானி இயக்கும் திட்டத்துக்கே தாதா சாகிப் பால்கே குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராஜமவுலி தயாரிப்பில், அவரது மகன் கார்த்தி இயக்கத்தில் உருவாகவிருந்த அந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தற்போது அந்தத் திட்டத்திலிருந்து அவர் விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான காரணமாக, ராஜ்குமார் ஹிரானி – ஆமிர் கான் இணையும் வேறு ஒரு “தாதா சாகிப் பால்கே” படம் உருவாகிக் கொண்டிருப்பதே என கூறப்படுகிறது. இதனால் ஒரே கதையை மையமாகக் கொண்ட இரு படங்கள் உருவாகுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஜூனியர் என்.டி.ஆர் விலகியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்து, ராஜமவுலி அணியினர் புதிய நடிகரைத் தேர்வு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.