மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை டெல்லியில் மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை இயக்குநர் மற்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
Facebook Comments Box