தின பலன்… Daily Horoscope in Tamil…. இன்று உங்கள் ராசி பலன்…. Rashi Palan…

0

மேஷம்
மேஷம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள் .வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வரக்கூடும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். பெற்றோர் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மிதுனம்
மிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்‌.
கடகம்
கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாளாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
கன்னி
கன்னி: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில்  அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
துலாம்
துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களில் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.
தனுசு
தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
மகரம்
மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
கும்பம்
கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சலிப்பு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். நிம்மதியான நாள்.
மீனம்
மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கோபத்தால் பகை உண்டாகும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here