கோவிட் தொற்று காரணமாக, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு 23 வயதாகும் போது ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கோவிட் தொற்று காரணமாக பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு, குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து நிதி உதவி செய்யப்படும் என பிரதமர் அறிவித்து உள்ளார்.
அந்த குழந்தைகள் 18 வயதாகும் போது மாதந்தோறும் நிதியுதவி செய்யப்படுவதுடன், 23 வயதாகும் போதும் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி பிஎம் கேர்ஸ் – ல் இருந்து வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Discussion about this post