இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 171,726 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழே குறைந்து வருகிறது. கொரேனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,77,19,431 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட கொரோனாவில் குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவது நம்பிக்கை தருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 2,51,70,952 பேர் குணமடைந்துள்ளனர்
இந்தியா முழுவதும் 22,26,095 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டு 8,944 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 3,563 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 322,384 பேராக அதிகரித்துள்ளது.
கடந்த 45 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. 90.34% பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மே 27ஆம் தேதி வரை 20.57 கோடி பேருக்கு நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் மட்டுமே 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post