நாடு முழுக்க கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக மஞ்சள் பூஞ்சை என்ற ஆபத்தான நோய் தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரத்தில் நோயாளி ஒருவருக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அது மோசமான சுகாதார சூழ்நிலை இருந்தால்தான் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவத் துறையினர்.
எனவே இதன் அறிகுறிகள் என்ன? இதனை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகள்
- சோம்பல்
- பசி குறைவது
- பசியின்மை
- எடை இழப்பு
- நெக்ரோசிஸ் காரணமாக கண்கள் வீக்கம்
இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?
வீட்டில் பழைய உணவுகளை சேர்த்து வைத்துக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கழிவறை உரிய வகையில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
மலம் கழிவறையில் தேங்கி இருக்கக்கூடாது.
வீட்டில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கக் கூடாது நன்கு காய்ந்த நிலையில் வீட்டின் தரை மற்றும் சுவர் பராமரிக்கப்பட வேண்டும்.இதற்கு சூரிய ஒளி வீட்டுக்குள் வருவதை உறுதி செய்ய வேண்டும்.
நன்கு காற்றோட்டம் இருக்க வேண்டும், இரண்டுக்கும் வழி இல்லாவிட்டால் மின்விசிறி போன்றவற்றை இயக்கி அறையில் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும்.
சிகிச்சை என்ன?
உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்யும் அளவுக்கு மஞ்சள் பூஞ்சை ஆபத்தானது. எனவே அறிகுறிகளை கவனித்தால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பூஞ்சைக்கும் அம்போட்டெரிசின் பி, ஊசி செலுத்தி கொள்வது மட்டும்தான் தற்போதைய சிகிச்சை முறையாக இருக்கிறது.
பிற பூஞ்சை நோய்களுக்கும் இந்த மருந்து ஊசியைதான் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.
Discussion about this post