அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகளாக.,
அனைவருக்கும் வீடு., அம்மா இல்லம் திட்டம்
மகளிர் நலன் காக்கும் குலவிளக்கு திட்டம்
மகளிருக்கு பேருந்து பயணச் சலுகை
சட்ட ஒழுங்கின் அமைதிப்பூங்கா தமிழகம்
அம்மா அவர்களின் தொலைநோக்குத் திட்டம் 2023
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
ஆண்டுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் 6 இலவச கேஸ் சிலிண்டர்
வாழ்வாதார உதவியாக ஆண்டிற்கு உழவு மானியம்
சூரியசக்தி சமையல் அடுப்பு
அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம்
கல்விக் கடன் தள்ளுபடி
கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிபி டேட்டா
வீட்டிற்கு ஒருவர் அரசு பணி
7 பேர் விடுதலை.,
மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் வழங்கப்படும்,
விலையில்லா கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும்,
இந்தத் தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசால், ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில், அனைத்து சாதிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியாக அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து சாதியினருக்கும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும்
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அணைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதை ஆணித்தரமாக அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்றுக்கு மூன்று முறையாக அதிமுகவின் தேர்தல் அறிக்கை வாசிக்கும் போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Discussion about this post