தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிடு பங்கீடு குறித்து திமுக, அதிமுக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுக வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் திமுக நிர்வாகிகளுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். 8 தொகுதியில் வென்றாலே கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமெனவும் பேட்டியின்போது வைகோ குறிப்பிட்டார்.
12 தொகுதியில் போட்டியிட்டால்தான் தனிசின்னம், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் 12 தொகுதி எதிர்பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு, 8-ல் வென்றாலே அங்கீகாரம் கிட்டும் என வைகோ பதில் கூறியுள்ளார். இதனால் மதிமுக-விற்கு 10-க்கும் கீழ் தான் தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post