நாட்டின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் நேர்மறை வளர்ச்சி கடந்துள்ளது. இம்முறை ஏற்றுமதி 2724 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும் போது 5.37% அதிகம் ஆகும். எண்ணெய் மற்றும் நகைகள் அல்லாத ஏற்றுமதி ஜனவரியில் 2240 கோடி அமெரிக்க டாலராகும். இது கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்றுமதியான 1979 கோடி அமெரிக்க டாலரை விட 13.21% அதிகமாகும்.
தானியங்கள், புண்ணாக்கு, இரும்பு தாது, தானிய தயாரிப்புகள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட பொருட்கள், சணல் மற்றும் தரை விரிப்பு உள்ளிட்டவை ஏற்றுமதியில் முதல் 5 இடங்களில் உள்ள பொருட்கள் ஆகும். இவற்றின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஜனவரியை விட நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. இறக்குமதியை பொறுத்தவரை இந்தாண்டு ஜனவரி மதிப்பு 4199 கோடி டாலராகும். இது கடந்த ஆண்டின் 4115 கோடி டாலரை விட 2.05% அதிகம்.
Discussion about this post