%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25B7%25E0%25AE%25BE%2B%25E0%25AE%25A8%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2588 தில்லி கலவரத்தில் காயமடைந்த காவலர்களை அமித்ஷா நேரில் சென்று பார்வை
வன்முறையில் 300 காவலர்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் வடக்கு தில்லியின் இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜன.28) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் சிகிச்சை முறைகள், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 60க்கும் அதிகமான நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுடன் 11 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், குடியரசு நாளன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். இதில் எதிர்பாராத விதமாக காவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் 300 காவலர்கள் படுகாயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் வடக்கு தில்லியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தில்லி கலவரத்தில் காயமடைந்த காவலர்களை அமித்ஷா நேரில் சென்று பார்வை appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box