கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இது தொடர்பாக ₹59 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இரண்டு கட்டமாக 8 ரபேல் (Rafale) விமானங்கள் ஏற்கனவே இந்தியா வந்து சேர்ந்து விட்டன. அவை குடியரசு தின விழா அணிவகுப்பிலும் வான் சாகசங்கள் நிகழ்த்தின.
இந்த நிலையில் மூன்றாம் கட்டமாக மேலும் 3 விமானங்கள் பிரான்சில் இருந்து புறப்பட்டு, இன்று இந்தியா வந்து சேர்ந்தன. சுமார் 7,000 கி.மீ. பயணம் செய்து இந்தியா வந்துள்ள இந்த விமானங்களில் நடுவானில் எரிபொருளை நிரப்புவதற்காக ஐக்கிய அரபு அமீரக விமானப் படையின் டேங்கர் விமானம் உதவி செய்தது. இதற்கு இந்திய விமான படை, தனது அதிகார பூர்வ டிவிட்டர் கணக்கில் ட்வீட் செய்து நன்றி தெரிவித்துள்ளது.
இந்திய விமான படைக்கு, இந்தியா வந்துள்ள மேலும் 3 ரபேல் (Rafale) விமானங்கள் கூடுதல் வலு சேர்க்கும் என்று பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இந்திய அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அனைத்து 36 ரபேல் விமானங்களும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
The third batch of three Rafale aircraft landed at an IAF base a short while ago. They flew over 7000Km with in-flight refuelling. The aircraft got airborne earlier in the day from #IstresAirBase in France. IAF deeply appreciates the tanker support provided by UAE Air Force. pic.twitter.com/tykLthzVlx
காஷ்மீரின் அரசியல் நிலவரம்: புதிய காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதன் பிறகான உள்நாட்டு சிக்கல்கள் காஷ்மீர், இந்திய அரசியலில் ஒரு நுண்ணிய மற்றும் தடுமாறும் பிரதேசமாக இருந்தது....
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசாவில் ஹமாஸ் போராளிகள் கட்டியெழுப்பியது போல், ஹிஸ்புல்லா போராளிகள் லெபனானில் ஏராளமான சுரங்கங்களை கட்டியுள்ளனர். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு சுரங்கம்...
மற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற விதி அதிமுகவில் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது தவறானது என்றும் அவர்...
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வாழ்த்து பெற்றார். இந்நிலையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி சந்தித்து,...
Discussion about this post