ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடனை விட துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது.இதில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஜோ பிடன் (வயது 81), குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் (வயது 78) நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஜோ பிடன் இதில் சரியாக செயல்படவில்லை. பல இடங்களில் சிக்கிக் கொண்டார். இதன் காரணமாக அவர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக வேண்டும் என அவரது சொந்த கட்சியை சேர்ந்த சில எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் ஜோபைடனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் ஜோ பிடனை விட துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் இருந்து விலகப் போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அவர் தனது நிதி திரட்டும் மின்னஞ்சலில் கூறியதாவது,
நான் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர். யாரும் என்னை வெளியே தள்ளவில்லை. நான் விலகவில்லை, இறுதிவரை இந்தப் போட்டியில் இருக்கிறேன். இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். நவம்பரில் டொனால்ட் டிரம்பை தோற்கடிக்க எனக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் உதவுங்கள். எத்தனை முறை இடித்தாலும் பரவாயில்லை. எவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒரு நாடாக, நாம் வீழ்த்தப்படும்போது, மீண்டும் எழுவோம். கடுமையாக உழைக்கிறோம்.
அதைத்தான் நான் செய்யப் போகிறேன். 2020ல் டிரம்பை தோற்கடித்தோம். 2024ல் அவரை மீண்டும் தோற்கடிக்கப் போகிறோம். ஆனால் அது எளிதாக இருக்காது. அதைச் செய்ய எனக்குப் பின்னால் நீங்கள் வேண்டும் என்று நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லியிருக்கிறார்கள்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறினார். ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கவில்லை என்று ஜோபைடன் கூறினார்.