பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கு தனி நாடு கோரி சில ஆயுதக் குழுக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றன. பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் மற்றும் சீன அரசுகள் சுரண்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, தடை செய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் 2022-ம் ஆண்டு அந்நாட்டு அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறியடித்தது.இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையின் நிலைகள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று பலுசிஸ்தானின் பிஷின் மாவட்டத்தில் உள்ள சுர்காப் சவுக் பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு ஒரு பெண் உயிரிழந்தார். 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.