வங்கதேசத்தை சேர்ந்த சிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் திரிபுராவுக்குள் நுழைவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பங்களாதேஷில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது, பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்தினர். இதனால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள திரிபுராவில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் உரிய ஆவணங்கள் இன்றி நுழைந்துள்ளதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது.
இதையடுத்து அகர்தலா ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வங்கதேசத்தில் இருந்து ஆவணங்கள் இல்லாமல் கொல்கத்தாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலை மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வேலை வாங்கித் தர முயன்ற 2 இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர்.
Discussion about this post