மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து சர்ச்சை

0

மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பட்ஜெட் விவாதத்தின் போது, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், “மதவாத அரசியலை முன்னெடுங்கள்” என குறிப்பிட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அப்போது சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.பி. ஆ.ராசா இருந்தார்.

தமிழச்சியின் இந்த பேச்சைக் கேட்ட பின்னணியில் அமர்ந்திருந்த விசிக எம்.பி. ரவிக்குமாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசனும் அதிர்ச்சியாக பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here