புனித ரமலான் நோன்பு திறப்பு விழாவின் வெற்றிக்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் – அண்ணாமலை
இன்றைய தினம், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணியின் சார்பில், புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு விழா விமரிசையாக மற்றும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல முக்கிய மத, சமூக, மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு, இஸ்லாமிய சொந்தங்களுடன் இணைந்து நோன்பு திறந்து சகோதரத்துவத்தையும் சமுதாய ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தினர்.
இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனி வரும் நாட்களிலும் இவ்வாறு அனைவரும் ஒருமித்திணைந்து விழாக்களை கொண்டாடி, சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் அன்பையும் பரப்ப வாழ்த்துகள்!
Facebook Comments Box