நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையை போராட்ட அரங்கமாக மாற்ற திமுக முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “சட்டப்பேரவைக்குள் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கோஷமிடுவது இதுவே முதல்முறை. இது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது” என்று கூறினார்.

முதலமைச்சர் மீது கேள்வி
“முதலமைச்சரே நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டால், நீதி வழங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், “நீதியை நிலைநாட்ட வேண்டியவர் முதலமைச்சர். ஆனால், அவரே நீதிமன்றத்தை நாடுவதாக இருந்தால், இதை எப்படி புரிந்து கொள்ளுவது?” என்று விமர்சித்தார்.

இஸ்லாமியர்கள் மீது தவறான உருவாக்கம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த பத்து ஆண்டுகளில் எந்த இஸ்லாமியர்களையும் பாதிக்கவில்லை என தெரிவித்த அவர், “இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசாக பாஜகவை சித்தரித்து, திமுக வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது” என குற்றம்சாட்டினார்.

இந்த அரசியல் பரபரப்பு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி இடையே மேலும் மோதல்களை ஏற்படுத்துமா என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

Facebook Comments Box