கள்ளக்குறிச்சி உயிரிழப்புக்கு திமுக அரசின் திறமையின்மையே காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கல்லுாரி விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் விவாதிக்க அனுமதி கோரிய அதிமுகவினர், நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி கல்லுாரி உயிரிழப்புக்கு திமுக அரசின் திறமையின்மையே காரணம் என குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காத திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், அரசின் அலட்சியத்தால் தமிழகம் முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.