தஞ்சாவூர் மாவட்டம், விளம்பக்குடி அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது X பதிவில்,

தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையில் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வாகனம் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகிய செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பக்தர்கள் சாலைகளில் நடந்து செல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவும், முடிந்தால் நெடுஞ்சாலைகளில் நடக்கும்போது ரிஃப்ளெக்டர் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து செல்லவும் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Facebook Comments Box