சபரிமலைக்கு செல்லும் நீலிமலை பாதையில் மண் சரிவு – மாற்றுப் பாதையில் பக்தர்கள் பயணம்

சபரிமலையில் பெய்து வரும் கனமழையினால், நீலிமலை பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால், பம்பையிலிருந்து சந்நிதானம் செல்லும் இந்த வழியில் தற்காலிகமாகப் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதன்மையான பாதையாக இருந்த நீலிமலையில், மரக்கூட்டம் மற்றும் அப்பாச்சிமேடு வழியாக சுமார் 5 கி.மீ. தூரத்தில் சந்நிதானம் செல்லக்கூடியதாக இருந்தது. தற்போது, பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெறும் வரை, பக்தர்கள் மாற்றுப் பாதையாகக் கருதப்படும் ஐயப்பன் சாலையை பயன்படுத்தும் வகையில் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சாலை வழியாகவே டிராக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்கள் இயங்குகின்றன. தற்போது, இதே வழியாகவே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக சென்று வருகின்றனர்.

Facebook Comments Box