ஹைதராபாத்தில் இருந்து நேற்று காலை திருப்பதிக்கு கிளம்பிய ஒரு விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால், அது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

ஸ்பைஸ் ஜெட்டின் விமானம், 80 பயணிகளுடன் ஹைதராபாதில் இருந்து நேற்று காலை திருப்பதியை நோக்கி புறப்பட்டது. புறப்பட்டதிலிருந்து சுமார் 10 நிமிடங்களுக்குள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை பைலட் கண்டறிந்து, ஹைதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்திற்கு உடனே தகவல் தெரிவித்தார்.

அதன்படி, அவசர தரையிறக்கம் செய்ய உத்தரவு வழங்கப்பட்டதால், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர், பயணிகள் வேறு விமானங்களில் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Facebook Comments Box