ஆடி மாதம் – அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது! ஆடிப்பெருக்கு தினத்தின் ஆன்மிக, பாரம்பரிய சிறப்புகள் என்ன?

ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டிற்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்த மாதத்தில் அன்னையான பராசக்தி மட்டும் இல்லாமல், நீரின் உருவாக இருந்து மக்களை காத்தருளும் காவிரி தாயையும் பக்தர்கள் வழிபட்டு நன்றியினை தெரிவித்துக் கொள்வதற்கான சிறப்பு தினமே ஆடிப்பெருக்கு திருநாள் ஆகும்.

ஆடி மாதத்தில் நடைபெறும் மற்ற விசேஷங்கள் அனைத்தும் கிழமை, நட்சத்திரம், திதி போன்ற காரகங்களை அடிப்படையாகக் கொண்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஆனால் 18 என்ற எண்மீது அடிபடையிலே மட்டும் கொண்டாடப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்கு ஆகும்.

பொதுவாக ஆடி மாதத்தில் கல்யாணம், வீடு கட்டுதல் போன்ற நன்மை பயக்கும் கிரியைகள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் ஆடிப்பெருக்கு நாளில் நல்ல காரியங்கள், தொழில் தொடக்கங்கள், திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்குவது வழக்கமாக உள்ளது. அதுபோல புதிய சொத்து வாங்கும் நாளாகவும் இந்த நாள் கெளரவிக்கப்படுகிறது.


18 என்ற எண்ணிற்கு ஏன் இவ்வளவு பெருமை?

ஆடிப்பெருக்கு திருவிழா, ஆடி மாதத்தின் 18ம் நாளில் கொண்டாடப்படுகிறது. அதனால் இதற்கு ‘ஆடி 18 பெருக்கு’ என்றழைக்கப்படும். இந்த நாளுக்கு ஏன் இத்தனை சிறப்பு என்பதை ஆன்மிகமும், இலக்கியங்களும் விளக்குகின்றன.

தமிழ் இலக்கிய நூல்கள் – 18
புராணங்கள் – 18
மகாபாரத போர் நடந்த நாட்கள் – 18
மகாபாரதத்தில் உள்ள பர்வாக்கள் – 18
பகவத் கீதையின் அதிகாரங்கள் – 18
சபரிமலையின் படிகள் – 18
கணங்கள் – 18

இவை அனைத்தும் 18 என்ற எண்ணுக்கு ஒரு சக்தி வாய்ந்த பரிமாணம் கொடுக்கின்றன. இதே நாளில் மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் வெற்றிபெற்றதாகவும் நம்பப்படுகிறது.


ஆடிப்பெருக்கு தினத்தின் தனிச்சிறப்புகள

பஞ்சபூதங்களில் நீர் மிக முக்கியமானது. உயிர்களின் தோற்றமே நீரிலிருந்து என மதிக்கப்படுகிறது. ஆகவே, ஆடிப்பெருக்கு அன்று ஆறுகளுக்கும், நீர்நிலைகளுக்கும் நன்றியைத் தெரிவித்துச் செய்யப்படும் பூஜைகளும், வழிபாடுகளும் நிகழ்கின்றன.

இந்நாளில், மழை நீரால் ஆறுகள் பெருகி வழிந்தோடும். அதனால்தான் இந்த நாளில் தொடங்கப்படும் எந்த செயலும் செழித்து பல மடங்காக வளர்வதாக ஐதீகம் கூறுகிறது.

நாள்பட்ட காலங்களில் விவசாயம் என்பது முழுவதும் மழையிலும், ஆறுகளிலும் சார்ந்திருந்தது. ஆடி மாதம் விவசாயம் தொடங்கும் காலமாக இருந்ததால், விவசாயிகள் நிலத்தையும், நீரையும் வணங்கி பூஜை செய்து, குடும்ப நலனையும் வளத்தையும் வேண்டி கொண்டனர். இதுவே ஆடிப்பெருக்கு வழிபாட்டின் பின்னணியாகும்.


ஆடிப்பெருக்கு வழிபாட்டு நடைமுறை

இந்த நாளில் அருகிலுள்ள ஆற்றங்கரைக்கு சென்று, இலை மேல் பலவகை உணவுகள், பழங்கள், இனிப்புகள் வைத்து, தீபம், தூபம் காட்டி வழிபடுவது வழக்கம்.

ஆற்றில் பூக்கள் தூவி வழிபடுவார்கள். திருமணமான புதுமண தம்பதிகள், தங்களது திருமண மாலையை ஆற்றில் விடுவார்கள். இது, வாழ்க்கை பெருகி வளமாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையில் செய்யப்படும் வழிபாடாகும்.

திருமணமான பெண்கள், மூத்த சுமங்கலிகளிடம் இருந்து தாலிசரடு மாற்றிக் கொண்டு, அவர்களிடமிருந்து ஆசியும் பெறுவர்.


வீட்டிலே ஆடிப்பெருக்கு வழிபாடு செய்யும் முறை

ஆற்றருகில் செல்ல இயலாதவர்கள், வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி, பைப் போன்றவற்றில் சந்தனம், குங்குமம் தொடுவார்கள்.

ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து, அதில் மஞ்சள், பூ சேர்த்து, அதை பூஜை அறையில் வைத்து, விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

இனிப்பாக பச்சரிசி + வெல்லம் சேர்த்து “காப்பரிசி” செய்து, பழம், பாக்கு, வெற்றிலை வைத்து, கங்கை, காவிரி நதிகளை மனத்தில் நினைத்து நன்றி செலுத்த வேண்டும்.

தங்களது முயற்சிகள் வெற்றியடையவும், குடும்பம் செழிக்கவும் வேண்டிக்கொள்வது இவ்வழிபாட்டின் நோக்கமாகும்.


ஆடிப்பெருக்கு வழிபாட்டிற்கு சிறந்த நேரம்: 2025

ஆகஸ்ட் 03, ஞாயிற்றுக்கிழமை
வழிபாட்டிற்கான நேரங்கள்:

  • காலை 6.00 – 9.00 மணி
  • காலை 11.00 – 12.00 மணி

நவமி திதி: காலை 9.45 வரை உள்ளது.
தாலிசரடு மாற்றுபவர்கள்: காலை 11 முதல் 12 வரை சிறந்த நேரம்.


தாலிசரடு மாற்றும் நெறிமுறை

இந்நாளில் புதுமணத் தம்பதிகள் தாலிபெருக்கி அணிவது வழக்கமாகும். திருமணமான பெண்கள், காலை குளித்து மஞ்சள் கயிறு எடுத்துக் கொண்டு, பழைய தாலியை சுத்தம் செய்து, புதிய கயிறில் பின்னி, அம்பாளின் பாதத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

பூஜைக்குப் பிறகு, மூத்த சுமங்கலிகள் அல்லது கணவரின் கைகளால் தாலியை கழுத்தில் அணியலாம். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.


Facebook Comments Box