சபரிமலை தரிசனத்திற்கான முன்பதிவுகள் மும்முரம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை தொடர்ச்சியாக வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்கள் ஆன்லைனில் தரிசனத்திற்கான முன்பதிவுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
முன்னதாக, ஜூலை 29-ம் தேதி நிறைபுத்தரி பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, 30-ம் தேதி சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது, புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அவை பிரசாதமாக பகிரப்பட்டு நடை சாத்தப்பட்டது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் அதிக நெரிசல் காணப்படும் நிலையில், பல பக்தர்கள் மாதாந்திர வழிபாடுகளில் பங்கேற்க விரும்புவதால், இம்முறை முன்பதிவு செயல்முறை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Facebook Comments Box