திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் செப்டம்பர் 24-ல் தொடங்குகிறது

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையப்பன் திருக்கோயிலில் நடைபெறும் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவம், வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஸ்ரீவாருக்கு பட்டுப் புடவைகளை சமர்ப்பிக்க இருக்கிறார். அதே இரவு, பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பர் வீதியுலா வருவார்.

செப்டம்பர் 25-ம் தேதி காலை சின்ன சேஷ வாகன சேவை, இரவில் அன்னவாகன சேவை நடைபெறும்.

செப்டம்பர் 26-ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவில் முத்துப் பல்லக்கு வாகனம் நிகழும்.

செப்டம்பர் 27-ம் தேதி காலை கற்பக விருட்ச வாகனம், இரவில் சர்வ பூபால வாகனம் வரும்.

செப்டம்பர் 28-ம் தேதி காலை மோகினி அலங்காரம், இரவில் கருட சேவை நடைபெறும்.

ஆறாம் நாளான செப்டம்பர் 29-ம் தேதி காலை அனுமன் வாகனம், மாலை 4 மணிக்கு தங்க ரத ஊர்வலம், இரவில் கஜவாகன சேவை நடைபெறும்.

செப்டம்பர் 30-ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை நிகழ்ச்சி நடைபெறும்.

அக்டோபர் 1-ம் தேதி காலை தேரோட்டம், இரவில் குதிரைவாகன சேவை நடைபெறும்.

இறுதி நாளான அக்டோபர் 2-ம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கரத்தாழ்வாரின் சக்கர ஸ்நானம் நடைபெறும். அதே நாள் இரவு 8.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடையும்.

பிரம்மோற்சவ காலத்தில் தினமும் காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வாகன சேவைகள் பக்தர்களுக்காக நடைபெறும்.

Facebook Comments Box