நடராஜருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான வைரம் பதித்த தங்கக் குஞ்சிதபாதம்

சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் அமைந்துள்ளது. வெளிநாடுகள், பிற மாநிலங்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் பெருமளவில் வந்து தரிசனம் செய்யும் இந்தக் கோயிலில், ஸ்ரீ நடராஜப் பெருமான் இடது காலை தூக்கி ஆனந்த தாண்டவ தரிசனத்தில் அருள்பாலிக்கிறார்.

அவரது இடது திருவடியில் பொருத்துவதற்காக, ஒரு பக்தர் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைரம் பதித்த தங்கக் குஞ்சிதபாதத்தை அர்ப்பணித்துள்ளார்.

இந்த குஞ்சிதபாதம், கட்டளை தீட்சிதரான சம்பந்த தீட்சிதரின் தலைமையில் பூஜிக்கப்பட்டு, கோயில் குழு செயலாளர் த. சிவசுந்தர தீட்சிதரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீ நடராஜப் பெருமானின் திருவடியில் பொருத்தப்பட்டது.

Facebook Comments Box