தினமும் 100 கிலோ மலர்களால் அலங்கரிக்கப்படும் திருப்பதி ஏழுமலையான்

அலங்காரத்துக்கு பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு, ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பலவிதமான மலர் மாலைகள் சூட்டப்படுகின்றன. இதற்காக 12-க்கும் மேற்பட்ட வகை மலர்களும், துளசி, தவனம் உள்ளிட்ட 6 வகை இலைகளும் பயன்படுகின்றன.

சாதாரண நாட்களில், மூலவரின் தினசரி அலங்காரத்துக்கு சுமார் 100 கிலோ மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் முழுக்க முழுக்க பூக்களால் மட்டுமே அலங்காரம் செய்யப்படுவது சிறப்பு. இதனை பூ அங்கி சேவை என அழைக்கப்படுகின்றது. அந்த நாளில் 200 கிலோக்கும் மேற்பட்ட மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியில், ஏழுமலையானுக்காக சாத்தப்படும் மலர் மாலைகள் பற்றி விரிவான விளக்கம் காணப்படுகிறது. ஒவ்வொரு மாலைக்கும் தனித்தனி பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

சிகாமணி மாலை, சாலைக்கிராம மாலை, கண்டசரி மாலை, வக்‌ஷஸ்தல மாலை, சங்கு மாலை, சக்கர மாலை, தாவள மாலை, திருவடி மாலை உள்ளிட்ட பல்வேறு வகை வண்ண மலர் மாலைகளால் மூலவர் தினமும் அலங்கரிக்கப்படுகிறார்.

இந்த அலங்காரத் தரிசனத்தில் ஈடுபடும் பக்தர்கள், ஏழுமலையானின் ஒளிவீசும் தோற்றத்தை கண்டும் கண்டும் ஆனந்தம் அடைகின்றனர்.

Facebook Comments Box