பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில், நேற்று துபாயில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடின.
பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பல்வேறு திரைப்பட நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி, ராஜ்குமார் ராவ், சித்தார்த் மல்ஹோத்ரா, சமந்தா, அஜய் தேவ்கன், கரண் ஜோஹர், விவேக் ஓபராய், ஷர்வரி, அனுஷ்கா சர்மா, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி மற்றும் பலர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.