WhatsApp Channel
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சார்பில் ஜவதுல்லா, அலி நசீர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு 167 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்மத்துல்லா 36 ரன்களும், குர்பாஸ் 21 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் களம் இறங்கிய இப்ராகிம் ஜத்ரன் 4 ரன்களிலும், நஜிபுல்லா ஜத்ரன் 12 ரன்களிலும், ரசூலி 0 ரன்னிலும், ஒமர்சாய் 1 ரன்னிலும், அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஒரு முனையில் வெற்றிக்காக போராடிய நபி 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இறுதியில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்து ஆப்கன் அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து UAE வெற்றி பெற்றது.
Discussion about this post