யு மும்பாவை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்!

0

யுடிடி சீசன் 6-ல் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் – யு மும்பா அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் கனக் ஜா (அமெரிக்கா), யு மும்பா அணியின் லிலியன் பார்டெட்டை 2-1 (11-6, 7-11, 11-9) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் இந்திய நட்சத்திரமான ஸ்ரீஜா அகுலா, யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸுடன் (ருமேனியா) மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சாக்ஸை 2-1 (11-9, 8-11, 11-5) என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் ஸ்ரீஜா அகுலா.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் ஆகாஷ் பால், பெர்னாடெட் சாக்ஸ் ஜோடி 3-0 (11-8, 11-6, 11-6) என்ற செட் கணக்கில் ஜெய்ப்பூர் அணியின் கனக் ஜா, ஸ்ரீஜா அகுலா ஜோடியை வீழ்த்தியது.

4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் ஜீத் சந்திரா 2-1 (5-11, 11-10, 11-7) என்ற கணக்கில் யு மும்பா அணியின் ஆகாஷை தோற்கடித்தார்.

கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் பிரிட் ஈர்லாண்ட் (நெதர்லாந்து) 2-1 (11-7, 11-4, 7-11) என்ற கணக்கில் யு மும்பா அணியின் யஷஸ்வினி கோர்படேவுடன் வீழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here