ஸ்டட்கர்ட்: ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரத்தில் நடைபெற்று வரும் பாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி மற்றும் அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஆகியோர் சேர்ந்த ஜோடி, மெக்சிகோவைச் சேர்ந்த சாண்டியாகோ கோன்சலஸ் மற்றும் அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் ஆகியோரை எதிர்த்து விளையாடியது. 1 மணி 34 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், யுகி பாம்ப்ரி-காலோவே ஜோடி 6-7 (5), 6-7 (5) என்ற செட்களில் தோல்வியடைந்தது.